என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி
நீங்கள் தேடியது "மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி"
பாராளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் இன்று தி.மு.க. முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. #LSPolls #DMKAlliance
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலுக்காக தி.மு.க. அமைத்துள்ள கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து 10 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
அடுத்த கட்டமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் இன்று தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை 10.30 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன், மத்திய குழு உறுப்பினர் சம்பத் ஆகியோர் வந்தனர்.
இவர்களை தி.மு.க. தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது, திருப்பூர், கன்னியாகுமரி தொகுதிகளில் போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு விரும்புவதாக தெரிவித்தனர். இந்த தொகுதியை ஒதுக்க முடியாவிட்டால் மதுரை, கோவை தொகுதிகளை ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தனர். இந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்ததும் வெளியே வந்த மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இன்று நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்ததாகவும், மற்ற கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசிவிட்டு, தங்களுக்கு உரிய தொகுதிகளை திமுக தலைமை அறிவிக்கும் என்றும் கூறினார்.
இன்று பிற்பகல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவாலயம் வந்து கூட்டணி பேச்சு நடத்துகிறார். மாலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அறிவாலயம் வந்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவாலய நிர்வாகிகள் தெரிவித்தனர். #LSPolls #DMKAlliance

அறிவாலயத்தில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றுள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இந்த பேச்சுவார்த்தையின்போது, திருப்பூர், கன்னியாகுமரி தொகுதிகளில் போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு விரும்புவதாக தெரிவித்தனர். இந்த தொகுதியை ஒதுக்க முடியாவிட்டால் மதுரை, கோவை தொகுதிகளை ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தனர். இந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்ததும் வெளியே வந்த மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இன்று நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்ததாகவும், மற்ற கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசிவிட்டு, தங்களுக்கு உரிய தொகுதிகளை திமுக தலைமை அறிவிக்கும் என்றும் கூறினார்.
இன்று பிற்பகல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவாலயம் வந்து கூட்டணி பேச்சு நடத்துகிறார். மாலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அறிவாலயம் வந்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவாலய நிர்வாகிகள் தெரிவித்தனர். #LSPolls #DMKAlliance
×

X